January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2023 மார்ச் 20க்கு முன்னர் தேர்தல்?

2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் அது தொடர்பான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

2022 மார்ச் மாதத்துடன் உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ, அவற்றின் பதவிக் காலத்தை ஒரு வருடத்தால் நீடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.