File Photo
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்தியா செல்ல முயற்சித்த 8 பேர் மன்னார், பேசாலை பகுதியில் கைகது செய்யப்பட்டுள்ளனர்.
13 ஆம் திகதி இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பேசாலை குடியிருப்பு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களிடையே 3 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.