May 29, 2025 0:11:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு தாமரைக் கோபுரம் நாளை திறக்கப்படுகிறது!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் செப்டம்பர் 15 முதல் ஆரம்பமாகவுள்ளது.

‘லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவாகத்தின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை தாமரை கோபுரம் திறக்கப்பட்ட பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உள்நாட்டவர்களுக்காக சாதாரண கட்டணமாக 500 ரூபாவுக்கும், வரிசைகள் இன்றி செல்ல 2,000 ரூபாவுக்கும் நுழைவுச் சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளன.

அத்துடன் வெளிநாட்டவருக்காக 20 அமெரிக்க டொலருக்கு நுழைவுச் சீட்டு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2022 பெப்ரவரி 28 ஆம் முடிவடைந்தது.

இதுவரை 80 சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20 சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.