இலங்கை வந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமந்தா பவருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கை விவசாயிகளுக்கு வசதிகயை ஏற்படுத்துவதற்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜா-எல ஏகல பகுதியில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய போது சமந்தா பவர் கூறியிருந்தார்.