ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர், கடந்த திங்கட்கிழமை இருவருக்கும் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று ரணில் விக்கிரமசிங்க அவரை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.