இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ ஐநா மனித உரிமைகள் பேரவையை கேட்டுக்கொண்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டு ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ இதனை கூறியுள்ளது.
குறித்த அறிக்கையில், மனித உரிமைகள் ஆணையாளரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் நிபுணர்களை கொண்ட பொறிமுறையொன்றை நிறுவுமாறும் ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ ஐநா மனித உரிமைகள் பேரவையை கேட்டுக்கொண்டுள்ளது.
Amnesty International calls on the UN Human Rights Council to strengthen its oversight of Sri Lanka during the crisis triggered by the political and economic collapse. https://t.co/yLgU1oznPx #HRC51 #SriLanka
— Amnesty International South Asia, Regional Office (@amnestysasia) September 10, 2022