January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடு செல்ல முயன்ற 85 பேர் மட்டக்களப்பு கடலில் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 84 பேர் மட்டக்களப்பு கடல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தூர மீன்பிடி படகில் பயணித்த போது, கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களிடையே 14 பெண்களும் 11 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் குறித்த படகுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.