January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அமைச்சர்கள் மனித உரிமைகள் பேரவைத் தலைவரை சந்தித்தனர்!

ஜெனிவா சென்றுள்ள இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ ஆகியோர் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, மனித உரிமை நடைமுறைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அமைச்சர்கள் ஜெனிவா சென்றுள்ளனர்.