பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து திரட்டும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வாகனப் பேரணியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று காலை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமான குறித்தப் போராட்டம் 25 மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக ஹம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் ஆரம்பமான போது, தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும் சர்வஜன நீதி அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த பலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டிருந்தார்.