முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் கட்சி பலத்தை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வன்முறையை முன்னெடுப்பவர்கள் மீது கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை பிரயோகிக்கத் தவறியுள்ளதாகவும், ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை மேற்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கு அவசியமான தலைமைத்துவத்தை பொதுஜன பெரமுன வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.