சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் இலங்கை வந்துள்ளார்.
இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு கொழும்பில் தங்கியிருக்கும் சமந்தா பவர், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.