File Photo
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடனை அவசரகால உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு திட்டத்திற்கு நிதியளித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளை தொடர்ந்து கூடிய விரைவில் அது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.