இலங்கை மாணவர்களுக்காக சீனா அரசாங்கத்தினால் 5000 மெட்ரிக் டொன் அரிசி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 10 இலட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக இந்த அரிசி தொகையை சீனா வழங்கியுள்ளது.
அரிசி தொகையை கல்வி அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் மற்றும் சீன தூதுவர் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக இந்த அரிசி பயன்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.