January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸில் அமெரிக்காவுக்கு பயணமானார்!

முன்னாள் அமச்சர் பஸில் ராஜபக்‌ஷ, அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் ஊடாக அவர் அமெரிக்கா செல்லும் நோக்கில் இன்று காலை விமான நிலையம் சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜுலை 9 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது, வெளிநாடு செல்வதற்காக பஸில் ராஜபக்‌ஷ விமான நிலையம் சென்றிருந்த போதும், விமான நிலையத்தில் அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்காமையினால் அவரால் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

பின்னர் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டிய தேவையிருப்பதாக நீதிமன்றத்தில் அவரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கு அண்மையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையிலேயே அவர் இன்றைய தினத்தில் அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.