January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனம்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி இலங்கையில் தேசிய துக்கத் தினத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வரை மறைந்த மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.