January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் குறைகளை கேட்டறிய புதிய பொறிமுறை!

வடக்கு மாகாணத்தில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவை தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கும் உள்ளூராட்சி அதிகாரிகளிடம் இருந்து அதற்கான துரிதமான பதிலை பெற்றுக்கொள்வதற்குமான பொறிமுறை ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் பணிப்புரையின் கீழ் இந்தப் பொறிமுறை செயற்படுத்தப்படுகின்றது.

இதன்படி மக்கள் தங்களின் முறைப்பாடுகள் மற்றும் குறைகளை ஆளுநர் செயலகத்திற்கு அனுப்பி வைக்க முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வட மாகாணம், ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது hgnpdisasteror@np.gov.lk என்ற மின்னஞ்சலுக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியுமென்று வடமாகாண செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நவம்பர் மாத நடுப்பகுதி அல்லது அதற்கு முன்னர் அவற்றுக்கு பதில் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.