பிரிட்டனின் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடிய போது, பிரதமர் தினேஸ் குணவர்தன அரசாங்கத்தின் இரங்கல் செய்தியை வாசித்தார்.
இதனை தொடர்ந்து எம்.பிக்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை எதிர்க்கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல இரங்கல் செய்தியை வாசித்தார்.
அத்துடன், மகாராணியின் மறைவையொட்டி, இன்று முதல் இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.