நீர் மின் உற்பத்தியுடன் தொடர்புடைய நீர்த் தேக்கங்கள் நிரம்பியுள்ளதால் இப்போதைக்கு மின்வெட்டுக்கு அவசியம் இருக்காது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இடம்பெறும் என்று அறிவித்திருந்த போதிலும் அந்த மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை என்று ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் மின்சாரத்தின் தேவை குறைவடைந்துள்ளமையினாலும், தேவையான அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமாக இருக்கின்றமையினாலும் மின்வெட்டுக்கான அவசியம் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இருக்குமாக இருந்தால் எதிர்வரும் டிசம்பர் வரையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.