மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி நகர்ப்புற மற்றும் பிரதான பாடசாலைகளில் மாணவர்களின் பாடசாலை பைகளை பரிசோதிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் மாணவர்களிடையே போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்புறங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், மாணவர்களின் பைகளை பரிசோதித்தல் தொடர்பில் அடுத்த வாரம் சுற்றறிக்கையில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.