கைது செய்யப்பட்டிருந்த காலிமுகத்திடல் போராட்டக் குழு செயற்பாட்டாளரான நடிகை தமித்தா அபேரட்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் நடந்த போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை அவர் பத்தரமுல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமித்தா அபேரட்ன, இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.