January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய பாதுகாப்பு தொடர்பாக புதிய சட்டம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதத்தின் புதிய வடிவங்கள் தொடர்பான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக தற்போது காணப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களிலுள்ள பலவீனங்களை தவிர்ப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும் மற்றும் சட்ட வலுவாக்கத்தை உறுதிப்படுத்தி, விசாரணை மற்றும் புலனாய்வுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநியமங்கள் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பாக முழுமையான சட்ட முறைமையொன்றுக்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.