January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

அரசாங்கத்தின் உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் சில சரத்துக்களைள நிறைவேற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்புடன் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி சிலர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களை ஆராய்ந்த நீதிமன்றம், அது தொடர்பான தமது நிலைப்பாட்டை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.

இதன்படி, இன்று முற்பகல் அதனை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதன்போது, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.