January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன்,  டிசம்பர் 5 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் வரையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.