January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டன!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி 12.5 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன் புதிய விலை 4551ரூபாவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.5 கிலோ சிலிண்டரின் வவிலை 21 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதத்தில் ஒவ்வொரு 5 ஆம் திகதியும் எரிவாயு விலையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.