January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Raining Common Image

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தப் பகுதிகளில் எதிர்வரும் மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்குகும் மேல் பலத்த மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.