January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் உயரும் ஹோட்டல் உணவு விலைகள்!

கொத்து உள்ளிட்ட கோதுமை மாவால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, ஹோட்டல்களில் கொத்து ரொட்டியின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் பராட்டா ரொட்டி, மரக்கறி ரொட்டி, ரோல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் விரைவில் அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்தையில் கோதுமை மாவின் விலை பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாணின் விலையை 300 ரூபா வரையில் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ள போதும், அந்த விலை அதிகரிப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிக்கப்படவுள்ளது.