ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை அமைத்துள்ளன.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இந்தக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மஹரகம, தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டணியின் பொது மாநாடு இன்று நடைபெற்றது.
இதன்போது கூட்டணியின் பெயர் மற்றும் கட்சி தலைவர் உள்ளிட்ட விடயங்கள் அறிவிக்கப்பட்டன.
‘மேலவை இலங்கை கூட்டணி’ என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைவராகவும், செயலாளராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி. வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அமைப்பாளராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கூட்டணியின் பிரதித் தலைவர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.