File Photo
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அவர் எங்களுக்கு சவாலே கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் மீள் வருகையானது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே சவாலாக அமையும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.