May 28, 2025 20:20:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள  கடைகள், பேரூந்து நிலையங்கள், நவீன சந்தை தொகுதிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டன.

யாழ்.மாநகர முதல்வர்,  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரிகள் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தினர்.

குறித்த பகுதிகளில் சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளி பேணுதல் மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.

மேலும், மாநகர சட்ட விதிகளுக்கு முரணாக வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயற்படவேண்டும் என்பதையும், வெளி மாவட்டத்திலிருந்து யாழ். மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக  தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்  என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தினர்.