January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் இரு கிராமங்களுக்கு இடையே நீடிக்கும் மோதல்!

File Photo
கடந்த நான்கு நாட்களாக அந்தப் பகுதிகளில் மோதல் நீடிப்பதாகவும், இதனால் அங்கு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதல்களால் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 25 பேர் பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு கிராமங்களுக்கும் இடையே கடந்த காலங்களில் நிலவிய முறுகல் நிலைமை மோதலாக மாறி அங்கு பதற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன்போது வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவங்கள் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு  7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அந்தக் கிராமங்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.