சமையல் எரிவாயு விலையை மீண்டும் குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
செப்டம்பர் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
100 ரூபா முதல் 200 ரூபா வரையில் விலை குறைக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவித்தல் நாளைய தினத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை வெளிநாடுகளில் உள்ளோருக்கு இலங்கையில் உள்ளவர்களுக்கு டொலர் அனுப்பி தங்களின் வீடுகளுக்கான எரிவாயுவை பெற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.