பொருட்கள், சேவைகள் மீதான வரி (வற்) அதிகரிப்பை தொடர்ந்து தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்கள் ஆணைக்குழு இந்த கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தொலைபேசி மற்றும் இணைய சேவைகளுக்கான வரி 20 வீதமாக உயர்த்தப்படவுள்ளன.
அத்துடன் தொலைக்காட்சி சேவை வரி 25 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.