பாண் விலையை மேலும் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 450 கிராம் நிறையுடைன பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 300 ரூபா வரையில் உயர்த்த தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களில் விலைகளையும் குறிப்பிட்ட வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் அவற்றுக்கான தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.