File Photo
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
இன்று அதிகாலை 12.50 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர் மீரிஹான இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து, பதவி விலகத் தீர்மானித்த அவர், கடந்த ஜுலை 13 ஆம் திகதி மாலைதீவு ஊடாக சிங்கப்பூர் சென்று, பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.