January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணிலின் வரவு செலவுத் திட்டத்தை 5 பேர் மாத்திரமே எதிர்த்தனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்பட்ட போது வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து 120 பேரும், எதிர்த்து 5 பேரும் வாக்களித்திருந்தனர்.

இதேவேளை 43 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகள் ஆதவாக வாக்களித்தன. ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் 5 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, டலஸ் மற்றும் வீரவன்ச அணிகள்  வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 30 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக இது சமர்பிக்கப்பட்டது.

இது தொடர்பான விவாதம் 3 நாட்களாக நடைபெற்று இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.