தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கமைய அரச நிறுவனங்களிடமிருந்து பொதுமக்கள் தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை நடைமுறைப்படுத்த பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன் தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, விண்ணப்பதாரிகளைக் கோரியுள்ளது.
கடிதங்கள் மூலம் கோரப்படும் தகவல்களை அனுப்புவதில் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.