January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலை குறையுமா?: அமைச்சரின் பதில்!

விலைச் சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளை இன்று மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

எனினும் எரிபொருள் விலைகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளுடன் ஒப்பிடுகையில் அவற்றின் விலைகளை குறைக்க முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகளை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.