File Photo
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள பொருளாதார கொள்கைகயை நிறைவேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் இடமளிப்பார்களா? என்பது சந்தேகமானது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரத் திட்டங்கள் காக்கையின் கூண்டில் வளரும் குயில் குஞ்சை போன்றே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்திலேயே ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது. இதனால் அது காக்கையின் கூட்டிலேயே முட்டையிடும். முதலில் குயில் குஞ்சும் காக்கை குஞ்சு போன்றே இருக்கும். குஞ்சுகள் பெரியதாகும் போது குயில் குஞ்சுகளை அடையாளம் கண்டுகொள்ளும் காக்கை அவற்றை விரட்டிவிடும். ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையும் இப்படி காக்கை கூட்டில் வளரும் குயில் குஞ்சை போன்றே தெரிகின்றது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.