November 18, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

37 அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி!

சந்தைக்கு விநியோகிக்கப்படும் 37 அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்தப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாகவே இந்த வர்த்மானி வெளியாகியுள்ளது.

அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, முட்டை, பால்மா , சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.