
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பக்கத்தில் இருந்து 12 எம்.பிக்கள் எதிர்க்கட்சி பக்கத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்படி ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சரித ஹேரத், சன்ன ஜயசுமன, கே.பி.எஸ். குமார சிறி, குணபால ரட்ணசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, உபுல் ஹலப்பதி, திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளரான முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இது தொடர்பில் சபையில் விசேட அறிவித்தலொன்றை விடுத்து, சுயாதீன அணியாக தாம் எதிர்க்கட்சி பக்கத்திலேயே இனி அமருவோம் என்று தெரிவித்துள்ளார்.