
இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்பதுடன் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகாவலி, களனி, நில்வலா மற்றும் களுகங்கை ஆகிய நதிகளின் அருகே வசிப்போரை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை அனர்த்தகங்களின் போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக குறிப்பிட்ட பிரதேசங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.