
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மருதானை தொழில்நுட்ப சந்தியில் இருந்து புறக்கோட்டை பக்கமாக பயணிப்பதற்கு முதலில் திட்டமிட்டிருந்த மாணவர்கள், பொலிஸாரின் தடைகளை தொடர்ந்து, டீன்ஸ் வீதி ஊடாக நகர மண்டபம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதன்போது இடையில் அவர்களை மறித்த பொலிஸார், பேரணியில் சென்றவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மேலும் பேரணியில் கலந்துகொண்ட பலரையும் கைது செய்து பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் டீன்ஸ் வீதி பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.