
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 3,250 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பள நிர்ணய சபையின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் சம்பள நிர்ணய சபையின் செயலாளர் ஆகியோரை சந்தித்து அது தொடர்பான கடிதத்தை கையளித்துள்ளனர்.