January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெறுமதி சேர் வரி செப்டம்பர் முதல் அதிகரிப்பு!

பொருட்கள் சேவைகள் மீதான ‘பெறுமதி சேர்’ வரியை (வற்) அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இதன்படி செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வரிகளை அதிகரித்து, அரச வருமானத்தை உயர்த்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் அதுபற்றி பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை முழுமையாக இந்த இணைப்பில் வாசிக்கலாம்.