
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கலந்தரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.