January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடைக்கால வரவு செலவுத் திட்டம்: (Live Blog)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகின்றார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியதை தொடர்ந்து நிதி அமைச்சர் என்ற வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டை முன்வைத்து உரையாற்றுக்கின்றார்.

ஜனாதிபதியின் உரையில் அறிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்

*வரி வருமானத்தை அதிகரித்து பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*செப்டம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (வட்) 12 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படும்.

*பணவீக்கத்தை குறைப்பதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிவு.

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

* 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

*கர்ப்பிணித் தாய்மாருக்கு 2500 ருபா இடைக்கால கொடுப்பனவு வழங்க யோசனை.
*சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை.

*அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.