January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: வடக்கு, கிழக்கில் போராட்டம்!

File Photo

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்களிலும் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் பல்வேறு சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.