ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 1 மணிக்கு அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக இது சமர்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர், நாளை முதல் மூன்று நாட்களுக்கு அதன் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் 2 ஆம் திகதி மாலை இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.