January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

14 வயதில் உயர்தரப் பரீட்சையில் விசேட சித்தி!

9 ஆம் தரத்தில் கற்றுக்கொண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவர் அதில் விசேட சித்தியடைந்துள்ளார்.

கடவத்தை பிரதேசத்தை சன​ஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு சித்தியடைந்துள்ளார்.

இவர் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வர்த்தகப் பிரிவில் தோற்றியுள்ளார். இதில் மூன்று பாடங்களிலும் பி சித்திகளை பெற்று சாதித்துள்ளான்.

8 ஆம் தரத்தில் கற்கும் போதே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, அதில் 5 ஏ சித்திகளுடன் 8 பாடங்களில் சிறப்பு சித்திகளை பெற்றிருந்தார்.

இதனை தொடர்ந்து 7 மாதங்களுக்குள் உயர்தரப் பரீட்சையில் தோற்றி அதில் விசேட சித்திகளை பெற்றுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.