வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூடிய விரைவில் நாடு திரும்புவர் என்று எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன்படி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தான் கருதுவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை செப்டம்பர் மாதத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.